நம்முடைய ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவில்தான் உள்ளது. காய்கறி, பழவகைகளை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் நோய் நம்மை அணுகாது. பழ வகைகளில் மாதுளைக்கு தனி இடம் உண்டு.

* மாதுளம் வேரைக் கஷாயம் வைத்துக் குடித்தால் குடலிலுள்ள கிருமிகள் அழிந்து வெளிவந்து விடும்.

* மாதுளம் பழச்சாற்றை பெண்கள் தொடர்ந்து உண்டு வந்தால் “கர்ப்பாயசம்” சம்மந்தமான எல்லாக் கோளாறுகளும் அகலும்.

* மாதுளம் பழச்சாறு, தேன், இஞ்சிச்சாறு சம அளவு சேர்த்து உண்டால் சீதளம், இருமல், கபம் போன்ற வியாதிகள் நீங்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். ரத்தம் சுத்தமடையும்.

* மாதுளம் பழ விதைகளை அரைத்து பசுவின் பால்விட்டுக் கலந்து குடிக்க நீர்க்கடுப்பு நீங்கும். வெள்ளைப்படுதல் குணமாகும்.

* மாதுளம் பூவைக் கஷாயம் வைத்துச் சாப்பிட பித்தம், வாந்தி, அஜீரணத்தால் ஏற்படும் ஏப்பம் போன்ற குறைகள் குணமாகும். – உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY